Skip to main content

Posts

என்னதான் ஆச்சு ப்ளூட்டோவிற்கு!!!

நம் பள்ளிக் காலங்களில் சூரிய குடும்பத்தில் மொத்தம் 9 கிரகங்கள் இருந்ததாக படித்து வந்தோம். ஆனால் இன்றைய குழந்தைகள் எட்டு கிரகங்கள் மட்டுமே இப்போது இருப்பதாக படிக்கின்றனர். ப்ளூட்டோ என்ற கிரகத்திற்கு என்ன ஆயிற்று என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள். உலகளாவிய வானியல் ஒன்றியம் (international astronomical Union) என்ற அமைப்பு கிரகங்களுக்கான அடிப்படைக் கூறுகள் என பின்வருவனவற்றை சொல்கிறது: 1. கிரகம் என்பது சூரியனை சுழல வேண்டும். 2. கிரகம் என்பது அடிப்படையில் உருண்டை வடிவில் இருக்க வேண்டும். அதற்கு ஏதுவாக அது போதுமான எடை கொண்டதாக இருக்க வேண்டும். 3. அது சூரியனை சுழல்கின்ற பாதையில், வேறு பொருட்கள் அல்லது விண்கற்கள் ஆகியன தன்னுடன் சுழலாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.(தன் 'ஈர்ப்பு ஆதிக்கத்தில்' தன்னுடன் சுழலும் நிலாகளைத் தவிர்த்து) இதில் ப்ளூட்டோ என்ற கிரகம் மூன்றாவது விதியை பின்பற்றாது போனதால், அதனை கிரகம் என்று கூற முடியாது என்று அறிவியல் அறிஞர்கள் அறிவித்தார்கள். புளூட்டோ கிரகத்தின் சுழற்சிப் பாதையில் kuiper beltஐ சேர்ந்த ஏராளமான விண்கற்களும் சுழல்கிறது. ப்ளூட்டோவின் எடையும் அளவும் சிறிய
Recent posts

Cosmic நாட்காட்டி

காஸ்மிக் நாட்காட்டி (Cosmic calendar) என்று ஒரு சொல் பிரயோகம் உண்டு. இது கால் சகான்(Carl Sagan) என்ற விண்வெளி விஞ்ஞானியால் முதன் முதலில் சொல்லப்பட்டது. நம் பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த வரலாறையும் ஒரு மனித வருட காலத்திற்குள் சுருக்கி சொல்லும் ஒரு முயற்சியே இது. இந்த நாட்காட்டியில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நொடி பெருவெடிப்பு(big bang) நடந்ததாக வைத்துக்கொண்டால் டிசம்பர் 31 கடைசி நொடி அன்று நம் நிகழ் கணம் உள்ளதாக வைத்துக்கொள்ளலாம். இந்த நாட்காட்டியில் ஒரு மாதம் என்பது 1.2 பில்லியன் ஆண்டுகள் ஆகவும், ஒரு நாள் என்பது 40 மில்லியன் ஆண்டுகள் ஆகவும்,ஒரு நொடி என்பது 437 ஆண்டுகள் ஆகும் தோராயமாக எடுத்துக்கொள்ளலாம். மனிதர்களின் வரலாற்றை பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த வரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கவும், பிரபஞ்சத்தின் மீது மனிதர்களின் தாக்கத்தை புரிந்து கொள்ளவும் இது உதவும்.  ஜன 1: பெருவெடிப்பு நிகழுதல் ஜன 13 : முதல் நட்சத்திரம் தோன்றுதல் ஜன 22 : முதல் நட்சத்திர குடும்பம் தோன்றுதல் மார்ச் 16: பால்வெளி நட்சத்திர குடும்பம் தோன்றுதல்(Milky Way)  செப் 2 : சூரிய குடும்பம் உருவாக்கம். பூமி மற்றும் நிலவு தோன்றுதல். செப்

LUCA மற்றும் LUCY

LUCA என்றால் என்ன?             நாம் எப்படி தோன்றினோம் என்று ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு கற்பனைக் கதையை புராணங்கள் மூலம் சொல்கிறது. அவை அனைத்தும் நம்பிக்கை சார்ந்த கதைகளாகவே இருக்கின்றன. இன்றைய நவீன அறிவியல் தன்னுடைய ஆராய்ச்சியின் மூலம் நாம்் தோன்றிய விதத்தை பற்றி சொல்லும் கூற்று என்ன?               நம்முடைய மூதாதையரிடமிருந்து பரிணாம கொள்கையின் மூலம் நாம் தோன்றியதாக டார்வின் கூறினார். நான் கேட்பது அதுவல்ல. இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் எவ்வாறு தோன்றின? அனைத்து உயிர்களுக்கும் முதல் மூதாதையர் யார்? தற்போதைய அறிவியலின் கூற்றுப்படி, அனைத்து உயிர்களுக்குமான மூதாதையர் ஒன்று சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக இந்த உலகில் தோன்றியது. அந்த செல் (?!) கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிசன் ஆகியவற்றில் இருந்து தோன்றிய ஒரு கரிம சேர்மான பொருளாகும் (organic particle).          இந்த பொருளானது பூமியின் கடலின் அடியாழத்திலிருந்து வரும் எரிமலை குழாய்கள் அருகில் தோன்றியிருக்கலாம் என அறிவியல் கூறுகிறது. அவ்வளவு ஆழத்தில் தோன்றிய இப்பொருள், கார்பன்-டை- ஆக்சைடு மற்றும் சல்பர் ஆகியவற்றிலிருந்து அதற்கான