Cosmic நாட்காட்டி
காஸ்மிக் நாட்காட்டி (Cosmic calendar) என்று ஒரு சொல் பிரயோகம் உண்டு. இது கால் சகான்(Carl Sagan) என்ற விண்வெளி விஞ்ஞானியால் முதன் முதலில் சொல்லப்பட்டது. நம் பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த வரலாறையும் ஒரு மனித வருட காலத்திற்குள் சுருக்கி சொல்லும் ஒரு முயற்சியே இது. இந்த நாட்காட்டியில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நொடி பெருவெடிப்பு(big bang) நடந்ததாக வைத்துக்கொண்டால் டிசம்பர் 31 கடைசி நொடி அன்று நம் நிகழ் கணம் உள்ளதாக வைத்துக்கொள்ளலாம். இந்த நாட்காட்டியில் ஒரு மாதம் என்பது 1.2 பில்லியன் ஆண்டுகள் ஆகவும், ஒரு நாள் என்பது 40 மில்லியன் ஆண்டுகள் ஆகவும்,ஒரு நொடி என்பது 437 ஆண்டுகள் ஆகும் தோராயமாக எடுத்துக்கொள்ளலாம். மனிதர்களின் வரலாற்றை பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த வரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கவும், பிரபஞ்சத்தின் மீது மனிதர்களின் தாக்கத்தை புரிந்து கொள்ளவும் இது உதவும். ஜன 1: பெருவெடிப்பு நிகழுதல் ஜன 13 : முதல் நட்சத்திரம் தோன்றுதல் ஜன 22 : முதல் நட்சத்திர குடும்பம் தோன்றுதல் மார்ச் 16: பால்வெளி நட்சத்திர குடும்பம் தோன்றுதல்(Milky Way) செப் 2 : சூரிய குடும்பம் உருவாக்கம். பூமி மற்றும் நிலவு தோன்று...